கோடை விடுமுறை நிறைவு: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன, மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

Update: 2018-06-01 04:04 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமியின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றுக்கு கடந்த ஏப்ரல் 20-ந்தேதியில் இருந்தும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரெ.இளங்கோவனின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்தும் கோடைவிடுமுறை விடப்பட்டது.

கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, பாடப்புத்தகங்கள் இன்றே வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு  சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அசாதாரண சூழல் நிலவி, தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள துத்துக்குடியிலும், இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்