மாநில செய்திகள்
இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூ.மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தா.பாண்டியன்.  85 வயதாகும் இவர், கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். 

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அவர் அவ்வபோது  அதற்கான மருந்துகளை உட்கொண்டுவருகிறார்.  அதேபோல, டயாலிசிஸ் செய்தும் வருகிறார்.  

இந்தநிலையில்  தா.பாண்டியன் மூச்சு திணறல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.