மாநில செய்திகள்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை

10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி  4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்து உள்ளது.

மொத்த அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 , இதில்  15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75 சதவீதம். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் நான்கு. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் 900 எனகூறப்படுகிறது.