சசிகலா ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

சசிகலா ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உள்ளது.

Update: 2018-12-10 11:12 GMT
சென்னை

தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு என சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  அந்நிய செலாவணி தடுப்பு சட்டத்தின் கீழ் 4 வழக்குகளை அமலாக்கத்துறை தொடுத்திருந்தது.

ஆவணங்களை முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும், விசாரணைக்கும் ஆஜராகவில்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில்,  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை டிசம்பர் 13-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என  எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்  சசிகலா ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை   ரத்து செய்து உள்ளது. காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சசிகலா பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை  அந்நிய செலாவணி வழக்கை 4 மாதத்தில் முடிக்கவும்  ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்