ஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி ஆஜராகவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-18 12:53 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

ஜெயலலிதாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உதவியாளர்கள், பணியாளர்கள், பாதுகாவலர்கள், சிகிச்சை அளித்தவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்து, அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில்தான், சசிகலா, அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் இருந்து உரிய பதிலை பிரமாண பத்திரமாக ஆணையம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வருகிற 20ந்தேதி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார் என தகவல் வெளியானது.  இந்த நிலையில், அவர் மற்றொரு தேதியில் ஆஜராக உள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்