உயர்மின் கோபுர பிரச்சினை: விவசாயிகள் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு - வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2018-12-27 00:04 GMT
சென்னை,

உயர்மின் கோபுரங்களால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் என 13 மாவட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் உயர்மின் கோபுரம் தவிர்த்து புதைவடக் கம்பிகள் மூலமாக மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 27-ந்தேதி (இன்று) ஈரோடு மூலக்கரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பொது மக்களும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது.

இப்போராட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு போராட்டத்தின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் மாற்று வழியில் உயர் அழுத்த மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்