தமிழகத்தில் ரஜினிகாந்த்- அ.தி.மு.கவுடன் கூட்டணியா - பிரதமர் மோடி பதில்

தமிழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் ரஜினிகாந்த்- அ.தி.மு.கவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்து உள்ளார்.

Update: 2019-01-10 08:04 GMT
சென்னை

பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி பிரமுகர்களுடன் காணொலி காட்சி  மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது  அ.தி.முக மற்றும் ரஜினிகாந்துடன்  பாரதீய ஜனதா கூட்டணி அமைக்குமா  என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.

மக்களுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இதுவே வெற்றிக் கூட்டணி.   தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. 

தமிழகத்தில் நம்பிக்கையின்  அடிப்படையில் பாஜக கூட்டணி அமைக்கும். 

கூட்டணி விவகாரத்தில் பாரதீய ஜனதா வாஜ்பாய் வழியில் செயல்படும். கூட்டணி அரசியலை 20 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக  நடத்தியவர் வாஜ்பாய். 

பழைய நண்பர்களையும் பாரதீய ஜனதா வரவேற்க தயாராக இருக்கிறது. என கூறினார்.

மேலும் செய்திகள்