விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் -இஸ்ரோ சிவன்

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2019-01-18 09:28 GMT
சென்னை

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

இளம் அறிவியலாளர்களை உருவாக்கி, ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்வெளித்துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும். பிஎஸ்எல்வி ராக்கெட்டை தொழிற்துறையினர் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்