டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் தகவல்

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-12 10:03 GMT
சென்னை,

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.  இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் பேச தொடங்கினர்.  இதில், எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி பேசும்பொழுது, டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செயலி ஆபாசம் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதனால் இதனை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  இதற்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்