கிராம சபைக் கூட்டம்: கமல்ஹாசனின் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

கிராமசபைக் கூட்டம் தொடர்பான கமல்ஹாசனின் கருத்துக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2019-02-18 08:34 GMT
சென்னை,

தன்னை காப்பி அடித்து கிராமசபைக் கூட்டங்களை திமுக நடத்துவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், கலைஞானி கமல் சாருக்கு சமர்ப்பணம் எனக்கூறி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

"2015ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டங்களை திமுக நடத்தி, அதில் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய போது எடுத்த புகைப்படங்கள் தான் இது" என்று அவர் வெளியிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்