தே.மு.தி.க. விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

தே.மு.தி.க. விவகாரம் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2019-03-08 06:49 GMT
சென்னை, 

அண்ணா அறிவாலயத்தில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“ தே.மு.தி.க. விவகாரம் பற்றி துரைமுருகன் விளக்கம் தந்துவிட்டதால், நான் அதுபற்றி பேச விரும்பவில்லை.  ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத ஆட்சி தான் மத்தியில் செயல்படுகிறது. ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். தி.மு.க. கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆர். எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தந்துள்ளன. 

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்