ஊட்டி அருகே வாகன சோதனையில் ரூ.73 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

ஊட்டி அருகே தேர்தல் பறக்கும் படை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-03-12 16:26 GMT
நீலகிரி,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை வாகனங்களை மறித்து சோதனை நடத்தி வருகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  நேற்று நடந்த வாகன சோதனையில் ரூ.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், நீலகிரியில் ஊட்டி அருகே அத்திக்கல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டது.  இதில், வாகனம் ஒன்றில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்ப ரூ.73 லட்சம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்