சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...!

சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தமிழகத்தில் கிராமங்கள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

Update: 2019-04-18 10:49 GMT


தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. பல்வேறு இடங்களில் கிராம மக்கள் சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

நெல்லை பேட்டையை அடுத்த கக்கன் ஜி நகரில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடந்தும் வாக்களிக்க மாட்டோம் என கூறிவிட்டனர். இதனால் அங்கு வாக்கு பதிவாகவில்லை. 

திருவள்ளூர் மாவட்டம் சத்திரை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராததால் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 34, கே .கே.புதூர் கிராமத்தில் 943 ஓட்டுகள் உள்ளன. இங்கு செயல்படும் மருத்துவ கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

மேலும் செய்திகள்