“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!”- கனிமொழி
“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!” என கனிமொழி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சவேரியார்புரத்தில் திமுகவின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையமும், ஆளும் கட்சியும் கூட்டணி வைத்து செயல்படுவது போல் தோன்றுகிறது. ஆளும்கட்சிக்கு தோல்வி பயம் இருப்பதால் தான், தேர்தல் ஆணையம் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விமர்சித்தார்.
நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வருக்கு இல்லை. தெலுங்கானா முதல்வர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் ஸ்டாலினை சந்திக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.