தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2019-06-15 08:17 GMT
தேனி,

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில் தானியங்கி மின்தடை நீக்கும் பதிவு மையத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்.

25 கோடியே 52 ஆயிரத்து 371 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் மூலம், மின்தடை ஏற்படும் பகுதிகளை கணினி மூலம் தானாகவே  அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து புகார் அளிக்கவேண்டிய அவசியம் எழாது.

பின்னர்  நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில்,  ஆட்சியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட ஆட்சியர்கள் கோரிய நிதியை தமிழக அரசு வழங்கி உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்