2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் வைகோவை விடுவிக்க மறுப்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் அவரை விடுவித்த சென்னை ஐகோர்ட் மற்றொரு வழக்கில் விடுவிக்க மறுத்து விட்டது.

Update: 2019-06-20 08:47 GMT
சென்னை,

ம.தி.மு.க.வை உடைக்க முயற்சிப்பதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக 2006-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம் எழுதினார்.

2009-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கருணாநிதி தான் காரணம் என பொதுக்கூட்டம் ஒன்றில் வைகோ பேசினார்.

இவைதொடர்பான தமிழக அரசின் அவதூறு வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரிய வைகோவின் மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி,  பாரதிராஜா அலுவலகம் தாக்குதல் குறித்து பேசிய வழக்கில் விடுவித்தும், மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய வழக்கில் விடுவிக்க மறுத்தும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்