அரசின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் 21 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்

தமிழக அரசின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் 21 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Update: 2019-11-01 12:28 GMT
சென்னை

தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று நடைபெற்றது இந்த உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் துறை சார்ந்த  அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில்  ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2019 இல் கலந்து கொண்டவர்களின் நிலை உள்பட முதலீடுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.  21 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த தொழில் திட்டங்களின் மூலம் ரூ.8 ஆயிரத்து 120 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது  இதன் மூலம்  சுமார் 16,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த திட்டங்கள் சென்னை, அதன் இரண்டு அண்டை மாவட்டங்களான காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர், சேலம், கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரவுள்ளன என அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்