உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்; ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்-முதல்வர் பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-11-22 05:44 GMT
சென்னை

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி  மாவட்டம் உதயமானது . தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

 உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட தலைநகருக்கு 50 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது .

உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்  என கூறினார்.

மேலும் செய்திகள்