மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த போது திமுக இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்று தரவில்லை -முதல்வர் பழனிசாமி

மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது திமுக இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்று தரவில்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-12-18 06:05 GMT
சேலம்

சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் தெளிவுபடுத்தி உள்ளனர். குடியுரிமை சட்டம் இந்தியர்களை பாதிக்காது.

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களை பொருத்தவரை அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என நாங்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து உள்ளோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்து விட்டதாக கூறுவது தவறு. இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்வது போல் நாடகமாடுகிறது திமுக.

மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது திமுக இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை.

கொறடா உத்தரவின் பேரிலேயே குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு  ஓட்டளிக்கப்பட்டது என கூறினார்.

மேலும் செய்திகள்