இளைஞர்கள் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோராக முயற்சிக்க வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோராக முயற்சி செய்யுமாறு அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் கேட்டுக் கொண்டார்.

Update: 2020-01-08 08:01 GMT
சென்னை

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனின் கேள்விக்கு  பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும். நான் 55 வயதில் தான் கண்ணாடி அணிந்தேன்.

தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் டன் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் மீன் வளர்ப்புத்  தொழில் செய்தால் பத்து மாதங்களில் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.

மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது. இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோராக முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்