“தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது” சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-01-14 10:22 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது, அதை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்தத் தவறும் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது.

உள்ளாட்சித்தேர்தலில் முறைகேடு என ஸ்டாலினும், திமுகவினரும் வேண்டுமென்றே குறை கூறுகின்றனர்.

சி.எ.ஏ. என்.ஆர்.சி. விவகாரத்தில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புகிறார்கள். சி.எ.ஏ., என்.ஆர்.சி. விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை. குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்ய வருவதாக எந்த தகவலும் வரவில்லை. கூட்டணியை பொறுத்தவரை சில இடங்களில் விட்டுத்தர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

பொன்.ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடைபெறும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்