சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சீனாவில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-31 08:14 GMT
மதுரை,

சீனாவில் கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் வசித்து வரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்க அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் உள்ள 400 இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானம் ஒன்று சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாளை அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருக்கும் தமிழர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவர உத்தரவிடக்கோரி சமயசெல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்