பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-02-14 05:45 GMT
சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ஒதுக்கீடு

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு

*  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு

* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டு அது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்

* முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும். இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிப் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

* 2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என நம்புகிறோம்.

* பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்

மேலும் செய்திகள்