தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு

Update: 2020-03-26 07:50 GMT
சென்னை பாடி மேம்பாலத்தில் வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பிய காட்சி.
சென்னை,

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் தேவையின்றி சுற்றிய இளைஞர்களுக்கு லத்தியடியும் கிடைத்தது.

இந்த நிலையில்,   தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 1100 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,100 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  தொற்று நோய் தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்