10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிகல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-07-20 04:09 GMT
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்தும் பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார்.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பொதுத்தேர்வு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிகல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று  ஆலோசனை நடத்துகிறார். 

இதில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறை அளிக்கலாமா என ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்