தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி விபி துரைசாமி
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி உள்ளார்
சென்னை,
தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இருக்கும் என்று அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விபி துரைசாமி மேலும் கூறுகையில், “பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி. தமிழகத்தில் இனி பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன் தான் கூட்டணி அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.