விநாயகர் சதுர்த்தி விழா:அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிப்பதாக முதல்வர் உறுதி- பாஜக மாநில தலைவர் முருகன்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் முருகன் கூறினார்.

Update: 2020-08-17 14:47 GMT
சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் சந்தித்து பேசினார். 

முதலமைச்சர் பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின் பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். கோயில் வாசல் அல்லது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிமுறைகளை பின்பற்றி வழிபடுவோம். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதாக உத்தவாதம் அளித்தோம். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். 144 தடை உத்தரவை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்