கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-11-22 17:57 IST

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஓஎம்ஆர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்