சென்னைக்கு வரும் வெளிமாவட்ட பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னைக்கு வரும் வெளிமாவட்ட பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2020-08-19 10:39 GMT
சென்னை,

தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் மிக கடுமையாக பின்பற்றப்படும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை பார்க்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் பலருக்கு இ-பாஸ் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் இதையடுத்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே முக்கிய காரணங்களுக்காக மக்கள் தடையின்றி பயணிக்க 17-ந்தேதி முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும். விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் உடனுக்குடன் கிடைக்கும் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து எளிதானது இ பாஸ் நடைமுறை காரணமாக சென்னையை நோக்கி வெளி மாவட்ட மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னைக்கு வரும் வெளிமாவட்ட பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணியில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இ-பாஸ் பெற்று வருபவர்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் தலைமைச்செயலாளர் தலைமையில் இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கிருந்து வரும் மக்கள் சென்னைக்கு வருபவரை தனிமைப்படுத்த இந்த உத்தரவு வெளியகியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்