தனியார் இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் - இந்து முன்னணி தகவல்

அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படாது என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

Update: 2020-08-22 02:14 GMT
சென்னை,

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்க வேண்டும் என்பதில் இந்து முன்னணி தெளிவாக உள்ளதாக அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், பொதுகூட்டங்கள், ஊர்வலங்கள், விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் இருக்காது எனவும், முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் விழா கொண்டாடப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று தனியார் இடங்கள், வீடுகள், கோயில்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு, அன்று மாலையே கூட்டம் சேராமல் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.  இதற்கு அரசும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்