சென்னை அருகே பெண் வி.ஏ.ஓ. விஷம் குடித்து தற்கொலை
பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அகரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தேவம்பட்டு அருகில் உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் வீ.ஏ.ஓ.வாக வேலை பார்த்து வந்தார்.;
சென்னை, பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அகரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணா (வயது 27). இவர் தேவம்பட்டு அருகில் உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் வீ.ஏ.ஓ.வாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது திடீரென அருணா விஷம் குடித்து மயங்கினார். இதனையடுத்து அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அருணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.