விபத்தில் சிக்கியவருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி

விபத்தில் சிக்கியவருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்தார்.;

Update:2020-08-23 02:45 IST
சென்னை,

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் நெடுஞ்சாலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அந்த நேரத்தில், அப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சம்பவ இடத்தில் இறங்கினார்.

விபத்தில் சிக்கியிருந்த வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தான் கையில் வைத்திருந்த வெள்ளைத் துணியால் வாலிபரின் தலையில் வடிந்த ரத்தத்தை துடைத்தார். சற்று நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. உடனே, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து, அமைச்சரும் அந்த வாலிபருக்கு முதலுதவி செய்தார்.

பின்னர், அந்த வாலிபரை, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அதன்படி, ஆம்புலன்சில் அந்த வாலிபர் ஏற்றிச் செல்லப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அமைச்சரின் செயலைக்கண்டு அவரை பாராட்டினர்.

மேலும் செய்திகள்