படிப்படியாக குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்
ணைக்கு வரும் நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.;
சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10-ந் தேதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
அதாவது கடந்த 16-ந் தேதி அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தது. நேற்று வினாடிக்கு 1,847 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது இன்று மேலும் குறைந்து வினாடிக்கு 1,232 கனஅடியானது. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது வினாடிக்கு 14 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.