நெல்லையில் பண்டிகைக் கால கொண்டாட்டம்; கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நூற்றுக்கணக்கானோர் பேரணி

நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் பேரணி நடத்தினர்.;

Update:2025-12-21 22:05 IST

நெல்லை,

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், வண்ண விளக்குகள், இயேசு கிறிஸ்து பிறந்த வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலான குடில்கள், உருவ பொம்மைகளை வைத்து கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை அலங்காரம் செய்து வருகின்றனர்.

நெல்லையில் பண்டிக்கைக்கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இணைந்து பேரணியாக சென்றனர். புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, பாளையத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்துமஸ் பேரணி சென்றது. இதில் பலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, ஆடல் பாடலுடன் பண்டிகையை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்