திமுக இளைஞர் அணி கூட்டம் ஒத்தி வைப்பு - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
திமுக இளைஞர் அணி கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திமுக தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெறுவதால், கழக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.