அக்டோபர் 5ம் தேதி: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விவரம் வெளியாகி உள்ளது.

Update: 2020-10-05 13:37 GMT
சென்னை, 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,69,664 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,572 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலி எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,348 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,74,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 77,82,736 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 82,725 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 75,55,282 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,868 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 189 மையங்களில் (அரசு - 66, தனியார் - 123) கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது 45,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,77,541 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,256 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,47,819 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,139 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-











மேலும் செய்திகள்