தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-10-24 12:52 GMT
சென்னை,

தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 24ஆம் தேதி 2,865 ஆக இருந்த பாதிப்பு, சரியாக 4 மாதங்களுக்கு பின் மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.95 லட்சமாக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேர், காஞ்சிபுரத்தில் 140 பேர், திருவள்ளூரில் 165 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அதிகபட்சமாக கோவையில் 287 பேர், திருப்பூரில் 101 பேர், சேலத்தில் 148 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இன்று 4,024 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 31,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்