தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நாளை நேரில் ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நாளை நேரில் ஆஜராவாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Update: 2021-01-18 08:40 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாளை (ஜனவரி 19ம் தேதி) விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அல்லது அவரது வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராவார்களா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்