மணியாச்சி அருகே நடந்த கோர விபத்து: உயிரிழந்த விவசாய தொழிலாளிகள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சர் அறிவிப்பு

மணியாச்சி அருகே நடந்த கோர விபத்து: உயிரிழந்த விவசாய தொழிலாளிகள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சர் அறிவிப்பு.

Update: 2021-02-17 02:35 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலைக்கு சென்ற தனியார் வாகனம், தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்தது. இதில், வாகனத்தில் பயணம் செய்த கலைசெல்வன் மனைவி பேச்சியம்மாள், சுடலையின் மகள் ஈஸ்வரி, கணேசன் மனைவி மலையழகு, மனோகரன் மனைவி பேச்சியம்மாள் மற்றும் வேலுவின் மனைவி கோமதி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்