தேர்தல் பிரசாரத்துக்கு இடையே ரோட்டோரக்கடையில் டீ குடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே டீக்கடையில் அமர்ந்து டீ அருந்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Update: 2021-02-18 14:03 GMT
சென்னை

தமிழக சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் வருகிற மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றது. அரசியல் கட்சியினர் தற்போது தேர்தல் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக  முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இன்று (வியாழக்கிழமை) ராதாபுரம் தொகுதியில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய ஊர்களில் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடையே பேசினார். 

முன்னதாக தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

பின்னர் அங்கிருந்து பாவூர்ச்சத்திரம் செல்லும் வழியில் மகிழ்வண்ணநாதபுரத்தில் சாலையோரத்தில் டீக்கடையை பார்த்த அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு   டீக்கடையில் அமர்ந்து டி குடித்தார் .

டீ  மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருப்பதாகக் கூறிப் பாராட்டுத் தெரிவித்தார்

பாவூர்சத்திரத்தில் முதலமைச்சர் பழனிசாமி  பேசும் போது நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்பவர்கள் விவசாயிகள் . கிராமப்புறத்தில் 2.5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது  என கூறினார். 

மேலும் செய்திகள்