தமிழகத்திற்கு பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்; தமிழில் வணக்கம் கூறி பிரதமர் மோடி உரை

தமிழகத்திற்கு பல கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து தமிழில் வணக்கம் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

Update: 2021-02-25 12:07 GMT
சென்னை,

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கி வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியை வரவேற்று பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, கீழ் பவானி திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என கோரினார்.

இதன்பின்பு, ரூ.330 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ரயில் மேம்பாலம், 8 வழி கொண்ட கோரம்பள்ளம் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டன.

ரூ.934 கோடியில், கீழ் பவானி புதுப்பித்தல் நவீனமயமாக்கல் விரிவாக்க திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  8 ஸ்மார்ட் நகரங்களின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.  இதன்பின்னர், தமிழில் வணக்கம் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.  தொடர்ந்து, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.  பிரதமர் பேசுவதற்கு முன் 'வெற்றி வேல் வீரவேல்' என கூடியிருந்த தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி, திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன்.  இந்திய தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்கு அளப்பரியது.

அனல் மின் நிலையங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  மிக பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளோம்.  இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்