வன்னியர்களுக்கு கல்வியில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது!

Update: 2021-02-26 10:38 GMT
சென்னை

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்  ஒதுக்கீடு வழங்கும்   மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை முதல்  அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கல்வி வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தி முடிக்கப்படும். அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்