தமிழகத்தில் தற்போது 5.56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-06-19 09:27 GMT
சென்னை,

செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ள மாநகரம் சென்னை தான். தமிழகத்தில் தற்போது 5.56- லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. இன்று மாலை கூடுதலாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. 

தமிழக மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளதால், தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போடும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார். 

மேலும் செய்திகள்