நாளை முதல் சென்னை புறநகர் ரெயில்களில் மக்கள் பயணம் செய்ய அனுமதி
நாளை முதல் சென்னை புறநகர் ரெயில்களில் மக்கள் பயணம் செய்ய தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கி உள்ளது.;
சென்னை,
நாளை முதல் சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் புறநகர் ரெயிலில் பயணிக்கலாம். ஆண் பயணிகள் நான் பீக் ஹவர்ஸ் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு பணியாளர்கள் அனைவரும் உரிய அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்கள், முன்கள பணியாளர்களாக காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மட்டுமே புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.