சர்ச்சை பேச்சு விவகாரம்: கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது.

Update: 2021-07-24 15:40 GMT
கோப்புப்படம்
நெல்லை,

இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார். 

இந்த சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ்  பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்