கொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 923 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Update: 2021-07-27 18:35 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 923 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
113 பேருக்கு தொற்று
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5,124 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 113 பேருக்கு தொற்று உறுதியானது. 
தற்போது ஆஸ்பத்திரிகளில் 189 பேர், வீடுகளில் 734 பேர் என தனிமைப்படுத்தப்பட்டு 923 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 98 பேர் குணமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். 
அதாவது காரைக்காலில் நேதாஜி நகரை சேர்ந்த 51 வயது ஆண்  பலியானார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,791 ஆக உயர்ந்துள்ளது.
5 குழந்தைகள்
புதுவையில்       உயிரிழப்பு 1.49      சதவீதமாகவும், குண மடைவது 97.75 சதவீதமாகவும்   உள்ளது.  நேற்று முன் தினம் சுகாதார பணியாளர்கள் 5 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 4 ஆயிரத்து 135 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 986 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 3  பேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 2 குழந்தைகள் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்