பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3ஆவது அலை வரும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

Update: 2021-08-01 08:22 GMT
சென்னை,

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறியதாவது:-

பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா தொற்றின் 3ஆவது அலை வரும். புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டும் மக்கள் வீட்டை விட்டு வௌியே வர வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளன. திருமண நிகழ்வுகளில் சமூக இடைவெளியின்றி அருகருகே சாப்பிடக்கூடாது. விஷேச நாள்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்