பெண் என்பதால், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி

பெண் என்பதால்,வீராங்கனையை சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி விடுத்து உள்ளது.

Update: 2021-08-12 07:15 GMT
சென்னை

போலந்து நாட்டில் நடக்கும் தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் மேலும்  4 ஆண்களும் தகுதி பெற்று உள்ளனர். ஆனால் வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  அனுமதி மறுத்தது. இதை  எதிர்த்து செவித்திறன் குறைபாடு உடைய விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு  

தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால்,  வீராங்கனையை  சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதா ? அதை ஏற்க முடியாது.  நாளைக்குள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவிட நேரிடும் என உத்தரவிட்டு உள்ளது என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்