மதுரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-08-22 10:44 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக பாறை ஓவியங்கள், சமண சிற்பங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்டவை அவ்வபோது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வகுரணி மொட்டமலை பகுதியில் உள்ள புலிப்பொடவு என்ற பாறைக் குகையில் சுமார் மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். 

சிவப்பு நிறத்தில் புலி உருவம், பெண் ஓவியங்கள், புள்ளிகளால் ஆன மனித ஓவியம், குறியீடு ஓவியங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும் வட்டம் சதுரம், செவ்வகம் உள்ளிட்ட வடிவங்களால் ஆன குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன. இந்த குறியீடுகள் தகவல் பறிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் தமிழ் எழுத்துக்களின் முன்னோடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், உசிலம்பட்டியை சுற்றிய பகுதியில் கீழடிக்கு இணையான தொல்லியல் எச்சம் உள்ளதாகவும், அங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்