ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

நீட் தேர்வு நடப்பத்தால் ஏலகிரிமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-11 15:30 GMT
ஜோலார்பேட்டை

நீட் தேர்வு நடப்பத்தால் ஏலகிரிமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஏலகிரி மலை ஆகிய பகுதிகளில் இரண்டு தேர்வு மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடக்கிறது. வாணியம்பாடி சின்னக்கல்லுப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 900 மாணவர்கள், ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 900 மாணவர்கள் என 2 தேர்வு மையங்களில் 1,800 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். 

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் என்பதால் விடுமுறையான இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். நீட் தேர்வு நடப்பத்தால் இன்று ஏளகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

சிறப்பு பஸ்கள்

மேலும் வெளியிலிருந்து வரும் மாணவர்கள் எந்த சிரமமுமின்றி தேர்வு மையத்திற்கு செல்ல சிறப்பு பஸ் வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை மேலாளர் விநாயகம் ஏலகிரி மலையில் பஸ்கள் நிறுத்துவதற்கான இட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் இன்று 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், அந்த பஸ்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு திருப்பத்தூரிலிருந்து மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

அதிகாரிகள் ஆய்வு

ஏலகிரி மலை மற்றும் வாணியம்பாடியில் உள்ள தேர்வு மையத்தை ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், சங்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கனகுராணி, மாதவி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி செயலாளர்கள் சண்முகம், சின்னத்தம்பி உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்